குட்கா விவகாரத்தில் இரண்டாவது உரிமை மீறல் நோட்டீஸைஎதிர்க்கும் தி.மு.க. மனு மீது இன்று (24/09/2020) இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சென்னைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.
வெளியே எளிதாக கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்ட தி.மு.க.வினர் பேரவைக்குள் குட்கா எடுத்து வந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.