Advertisment

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா!

tamilnadu assembly deputy speaker coronavirus test is positive

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (28/09/2020) நடக்கும் நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

Advertisment

அதேபோல் தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஏற்கனவே முசிறி தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு, பர்கூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோருக்கு கரோனா உறுதியான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus Pollachi Jayaraman deputy speaker Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe