தமிழகத்தில் நடைபெறும் 2 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் தனது கூட்டணிக் கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்டு, நேற்று (25/09/2019)இரவு அதிமுகவின் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் மற்றும் தங்கமணி ஆகியோர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

Advertisment

tamilnadu assembly byelection admk party meet dmdk vijayakandh

அப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாங்க வணக்கம் எனக்கூறினார். அதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணி விஜயகாந்திடம் கேப்டன் இந்த தேர்தலில் நமது கூட்டணி வெற்றி பெற உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். 2 சட்டமன்ற தொகுதிகளிலும் நமது தேமுதிக ஏறக்குறைய தல பத்தாயிரம் வாக்குகள் பெற்றுள்ளது. இதை மீண்டும் நாம் பெற்றாலே அதிமுக வெற்றி பெறும் என கூறினார். இதற்கு பதிலளித்த விஜயகாந்த் சொல்லியாச்சு உங்களுக்கு தான் ஓட்டு போடுவாங்க நீங்க ஜெயிப்பீங்க என கூறியிருக்கிறார் அதற்கு அதிமுக அமைச்சர்கள் உங்க வார்த்தை எங்களுக்கு ஆசீர்வாதம் போல் உள்ளது எனக் கூறிவிட்டு வந்துள்ளார்கள். அதிமுகவுக்குதேமுதிக தலைவர்விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்திருப்பதால் அதிமுக வட்டாரம் உற்சாகமாக உள்ளது.