Published on 30/09/2019 | Edited on 30/09/2019
சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பரப்புரை செய்ய வருமாறு வேண்டுகோள். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.