Advertisment

இடைத்தேர்தல்: சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 21- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. அதேபோல் புதுவை மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் அரசியல் கட்சியின் முகவர்கள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

tamilnadu assembly by election vote counting start soon

காலை 08.00 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு 08.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனிடையே ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்னும் சற்று நேரத்தில் எண்ணப்படுகிறது.

Advertisment
VOTE COUNTING By election assembly Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe