நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர்கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Advertisment

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் போடும் இடைத்தேர்தல் என்ற நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது. மேலும் 2021-ல் மக்களின் பேராதரவுடன் ஆட்சியை கைப்பற்றி, மக்களாட்சிக்கு வழி வகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் விரைவாக முன்னேறி வருகிறது.

Advertisment

tamilnadu assembly by election not participate in makkal neethi maiyam kamal hassan

காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.