Skip to main content

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

தமிழக சட்டப்பேரவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.
 

2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடந்து வந்தது. இதில் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். 

TAMILNADU ASSEMBLY Adjournment SPEAKER ANNOUNCED

ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த "தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல்" மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடப்படாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்துள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

'பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி சாத்தியமா?' - அப்பாவு விளக்கம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'MLA post for Ponmudi'-Speaker Appa's explanation

சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Next Story

சபாநாயகரின் அதிரடி முடிவு; உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Speaker's Action Decision; Congress MLAs sought the Supreme Court

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒருவரும் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை சபாநாயகர் கடந்த 1 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். மேலும் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழ் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.