மதுரை மாநகராட்சி ஊழல், தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்துவார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் கடந்த மாதம் 11- ஆம் தேதி சத்தியம் டிவியில் விவாத நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அந்த சமயம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அன்று இரவே அதனுடைய ஒளிபரப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த விஷயத்தை சத்தியம் டிவியின் நேயர்கள் 3 பேர் TDSAT(TELECOM DISPUTES SETTLEMENT & APPEALLATE TRIBUNAL) எனப்படும் தொலைத்தொடர்பு தீர்ப்பாயத்தில் வழக்காக தொடர்ந்தனர்.

TAMILNADU ARASU CABLE TV COMPANY TELECOST PROBLEM TDSAT FINE ORDER

Advertisment

அந்த வழக்கை விசாரித்த தொலைத்தொடர்பு தீர்ப்பாயம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் டிவி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த சிங்காரவேல் என்பவருக்கு இரண்டு வாரத்தில் அந்த தொகையை தர வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 'TDSAT' அபராதம் விதித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment