Advertisment

தமிழகம்- ஆந்திரா இடையே பேருந்து போக்குவரத்து... தமிழக அரசு அனுமதி!

tamilnadu to andra pradesh bus service tn govt

Advertisment

தமிழகம்- ஆந்திரா மாநிலத்திற்கு இடையே பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் இருந்து வரும் நவம்பர் 25- ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே புதுச்சேரி, கர்நாடகா மாநில பேருந்து போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், தற்போது ஆந்திர மாநிலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

bus service Tamilnadu Andhra Pradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe