சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

tamilnadu and pondicerry rain possible chennai meteorological director puviyarasan speech

மேலும்தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அதிகபட்சமாக திருச்செந்தூரில் 7 செ.மீ, சீர்காழியில் 6 செ.மீ, மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.