Skip to main content

10% இட ஒதுக்கீட்டிற்கு துணை முதல்வர் ஆதரவு!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 10% இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

 

 

tamilnadu all parties meeting 10% quota support with deputy cm o.paneerselvam speech

 

 

தமிழகத்தில் 10% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், தமிழக மருத்துவ கல்லூரிகளில் 25% இடங்களை மத்திய அரசு அதிகரிக்கும் எனவும், இதனால் தமிழகத்தில் உள்ள 24 மருத்துவ கல்லூரிகளின் இடங்கள் 3500-லிருந்து 4500 ஆக அதிகரிக்கும் என தெரிவித்தார்.

 

 

tamilnadu all parties meeting 10% quota support with deputy cm o.paneerselvam speech

 

 

அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை பாஜக ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அதே போல் 10%இட ஒதுக்கீட்டிற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்