ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நாளை முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்

05:00 PM Oct 15, 2018 | arulkumar

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் நாளை முதல் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கோவையில் தமிழ்நாடு தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் இராமலிங்கம், கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றம் , தொழில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய தகுந்த அனுமதி மற்றும் லைசென்ஸ் இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது சட்டபடி குற்றம் என தீர்ப்பு அளித்து இருந்ததாகவும், இதனால் ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பாதிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய அரசை வலியுறுத்துவதாகவும், அரசின் ஆணைப்படி செயலாற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறிய அவர், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், பொதுமக்களை பாதிப்படைய செய்யும் நோக்கத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கோவை மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் 3500 போர்வெல் மற்றும் குடிதண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் இதனால் குறிப்பாக மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளி மற்றும் வணிக வளாகங்கள் நீர் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்களுடன் ஆலோசணை செய்து தீர்ப்பை மேல்முறையீடு செய்வது பற்றி பின்னர் அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT