டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் சந்தித்தார். அப்போது மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்கவும், திண்டுக்கல்-சபரிமலைக்கு புதிய ரயிலை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அமைச்சரிடம் ரவீந்திரநாத் குமார் எம்.பி கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raven2.jpg)
Follow Us