தமிழ்நாடு முழுவதும் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு 702 அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கரோனா பரவலால் கடந்த மே 10 முதல் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியது. கரோனா வழிகாட்டுதல்களுடன் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.