தமிழக அரசு ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் மற்றும் நெகிழி பைகள் பயன்பாட்டை நிறுத்த உத்தரவிட்டதன் பேரில் பேரூராட்சி பகுதிகளில் நெகிழி பைகள் பயன்பாட்டை கண்கானித்து தடுத்து வருகின்றனர்.

Advertisment

மேலும் பொது சுகாதாரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் எடுத்து வரும் நிலையில் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகம் பொது சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி திறக்கும் ஜீன்-3 தேதியன்று சின்னாளபட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில படிக்கும் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய பாடநூல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணம் 10ஆயிரம் லேபிள்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதில் மழைநீரை சேமிப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்.

l

நமது நகரம் தூய்மையான நகரம், பசுமையான நகரம் என்ற வாசகங்கள் பொறித்த லேபிள் வழங்குவதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நாளும் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Advertisment

இது சம்மந்தமாக சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி கூறுகையில்... மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளில் பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். குறிப்பாக பள்ளி மாணவர் மத்தியில் பொது சுகாதாரம் மற்றும் மரம் வளர்ப்பது, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் என்பதால் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10ஆயிரம் லேபிள்களை வழங்கி வருகிறோம். அதை மாணவ, மாணவிகள் தங்கள் நோட்டு, புத்தகங்களில் ஒட்டி தினசரி பார்க்கும் போது சுகாதாரத்தை மேம்படுத்துவார்கள் என்றார்!