திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் 5- ஆம் வகுப்பு மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அரசின் முடிவை கண்டித்து 500- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

tamilnadu 5th, 8th std board exam tn govt announced coolege students strike

இதன் ஒரு பகுதியாக திருவாரூரில் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த கூடாது என வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் ஒன்றிணைந்த 500- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.