Advertisment

"தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு... கருத்துக் கேட்க முடிவு" - அமைச்சர் பேட்டி

tamilnadu 12th board exams education minister pressmeet

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து தற்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் தலைமையில் இன்று (02/06/2021) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் மாணவ, மாணவியர்களிடையே இருவேறு கருத்து நிலவுகிறது. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவெடுக்கப்படும். அனைத்து தரப்பின் கருத்துகளைக் கேட்ட பின் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும். மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

+2 exams anbil mahesh minister pressmeet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe