villupuram thiruvennainallur

நேர்ந்துவிட்ட கண நேர

கொடூரத்தில்

வெட்கிச் சாகிறது தீ!

*

பகை கூட

இப்படியொரு பகையைச்

சந்திக்கக் கூடாது.

சிறுமைபட்டு நிற்கிறது

சிறுமதுரை.

*

பெண் பிள்ளைகளைப் பெற்ற

தகப்பன்களை எல்லாம்

Advertisment

மரண வலியுடன்

கை பிசைய வைக்கிறது

‘அப்பா எங்கே?’ என்ற

Advertisment

அந்த ஈர குரல்;

ஈரக் குலைக்குள்

தீயாய் ஊடுருவும்

ஈரக் குரல்

*

வன்மம்

இவ்வளவு வன்மமானதா?

மனிதவடிவில்

இப்படியும்

கோர மிருகங்களா?

பழிவாங்கும் உணர்வை

ஒரேயடியாய்ப்

பழிவாங்கிவிட்டார்கள்

பாவிகள்.

*

ஜெயஸ்ரீக்களே!

இந்த பூமிக்கு

எந்த நம்பிக்கைக்கையில்

வந்தீர்கள்?

இது மரிப்பதற்கு மட்டுமான

மயான பூமி.

இங்கே

புன்னகை மலர்களுக்கு

இடமில்லை.

*

உலக உருண்டை

உயிர்ப்பற்ற

மண்ணுருண்டை ஆகிவிட்டது.

அவர்களால்.

*