
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்ததாகத் தகவல் வெளியானது. பெரிய அளவில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் முதல் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே நேற்று இரவு அதிமுகவிலிருந்து மூத்த உறுப்பினராக இருந்த அன்வர் ராஜா திடீர் என கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதிய அவைத்தலைவராக அவர் தேர்வாக வாய்ப்புள்ளது என கூறப்பட்ட நிலையில் அவர் திடீரென நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி ஆக்கியது.
இந்நிலையில் இன்று அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக மூத்த உறுப்பினர் தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியது முதல் அதிமுகவில் இவர் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் இவர் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.