'புதிய கீதை வழியில்..'- தனது பாணியில் விஜய்க்கு வாழ்த்து சொன்ன தமிழிசை

Tamilisai wished Vijay a happy birthday in her own style

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யின் 51 வது பிறந்தநாள் இன்று அவருடைய கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவருடைய பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

Tamilisai soundararajan

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய பாணியில் விஜய்க்கு சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அந்த பதிவில்,' நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய‌ தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

தமிழிசையின் பிறந்தநாள் வாழ்த்து பாஜக கூட்டணிக்கு வாருங்கள் என விஜய்க்குஅழைப்பு விடுப்பதுபோலஉள்ளதாகநெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

birthday Tamilisai Soundararajan tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe