tamilisai soundararajan

Advertisment

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

கஜா புயல் நிவாரண உதவியில் மத்திய அரசு எப்போதுமே உங்களுக்கு உதவ உங்களுடனேயே உள்ளது. மின்சாரத்திற்காக மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கியது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசு எந்தெந்த வகையில் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது.

நான் தஞ்சையில் உள்ள பள்ளிக் கூடத்தில் தான் படித்தேன். எனவே இங்குள்ள பகுதிகளை எனக்கு நன்கு தெரியும். எதிர்க்கட்சிகள், மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் பிரசாரம் செய்கின்றன.

மக்களிடம் அவர்கள் அவ நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது. மத்திய அரசு மக்களுடன் தான் உள்ளது. அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு கூறினார்.