Tamilisai Soundararajan

நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர், கமல் தலைப்பு செய்தியாக இருக்கலாமே தவிர, தலைவராக ஒருபோதும் வர முடியாது. நடிகர்கள் வந்து தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. 50 ஆண்டுகளாக போன்சாய் மரமாக இருந்து விட்டு ஆலவிருட்சமாக வளருவேன் என்பதை ஏற்கமாட்டார்கள். திரைப்பட போட்டியை போல் அவசர அவசரமாக சகோதரர் கமல் கட்சியை தொடங்குகிறார். அனைத்து அரசியல் தலைவர்களுமே களத்தில் இருக்கிறார்கள். கமல் கட்சி ஆரம்பித்து தான் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை இல்லை. இவ்வாறு கூறினார்.