பா.ம.க. சகோதரர்கள் தொடர்ந்து என்னை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர்: தமிழிசை சவுந்தரராஜன்

Tamilisai Soundararajan

சென்னை, தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

பா.ம.க.வினர் கமலாலயம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

டாக்டர் ராமதாசை நான் தவறாக குறிப்பிடவே இல்லை. மரங்கள் வெட்டப்படுவது பற்றி டாக்டர் ராமதாஸ் பேசுவதா? என்று மட்டுமே குறிப்பிட்டேன். ஆனால் நான் ஜாதியை பற்றி பேசியதாகவும், வன்னியர்களை பற்றி பேசியதாகவும் பொய் குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களை திசை திருப்ப நினைக்கின்றனர்

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

சொல்லாத ஒன்றை கூறி, தமிழிசை போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட்டார் என போராடுவது சரியல்ல. கருத்துக்கு எதிர் கருத்து தான் சரியாக இருக்கும். இன்று(நேற்று) காலை முதல் பா.ம.க. சகோதரர்கள் தொடர்ந்து என்னை தொலைபேசியில் மிரட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Ramadoss Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe