Advertisment

முதல்வர் பதவி ஆசையில் தான் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வந்தார். அவருக்கு பாராட்டுக்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Tamilisai Soundararajan

Advertisment

கரூரில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தனது அதிகாரம், ஆளுமை என்ன என்பது கவர்னருக்கு தெரியும். கவர்னர் நடவடிக்கையால் தமிழகத்தில் பிரச்சினை ஏதும் இல்லை. இதைவிடுத்து மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. இதில் காழ்ப்புணர்ச்சி தான் இருக்கிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் அதிகப்படுத்த வேண்டும். இந்த திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில் உள்ள தவறுகள் களையப்பட வேண்டும். அதற்காக திட்டமே வேண்டாம் என்று கூறக்கூடாது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

யாராக இருந்தாலும் இன்று கடவுளை நம்பி தான் ஆக வேண்டும். கோவிலுக்கு வந்து தான் ஆக வேண்டும். குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்து ரெங்கநாதரை தரிசனம் செய்ததால் கர்நாடக முதல்-மந்திரி ஆகிவிட்டார். ஒருவேளை ரெங்கநாதரை நம்பினால், குமார சாமிக்கு கொடுத்த அருளை தமக்கும் வழங்குவார் என்கிற நம்பிக்கையில், பதவி ஆசையில் தான் மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கத்திற்கு வந்திருக்கலாம். இந்து மத கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை வந்திருப்பதை பாராட்டுகிறேன் என்றார்.

Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe