
புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநரும் தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின்தாயார் கிருஷ்ணகுமாரி (79) இன்று (18.08.2021) உடல்நலக்குறைவால் காலமானார். தெலங்கானா ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த அவரது தாயார், இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மறைவுக்குத் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த இரங்கல் செய்தியில், ''தமிழிசைசவுந்தரராஜனின்தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்'' என கூறியுள்ளார்.
Follow Us