Advertisment

பகுத்தறிவுவாதி அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன்? கமலுக்கு தமிழிசை சரமாரி கேள்வி

dc kamal

Advertisment

தன்னை பகுத்தறிவுவாதி என கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன்? என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நடிகர் கமலஹாசன் கட்சி துவங்கியதும், கொடியேற்றம் செய்ததும் அமாவாசை தினத்தில் தான். தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் ஏன் இந்த வேஷம் போட வேண்டும்?. கமல்ஹாசன் போடும் போலி வே‌ஷங்களை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் வாக்குச்சாவடிக்கு ஒரு பா.ஜ.க பிரதிநிதி என்ற நோக்கில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, அழைக்காமலே கூட்டணிக்கு வர மாட்டோம் என சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஜி.எஸ்.டி வரியால் இந்தியாவில் பயன்பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

Advertisment

உதய் திட்டத்தால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தபட்டு உள்ளது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் வஞ்சிக்கபடக் கூடாது, தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழகத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக பல நல்ல திட்டங்களை தந்துள்ளது. திமுக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்படாத எத்தனையோ திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றித் தந்திருக்கிறார்தமிழக அரசுடன் தாய், பிள்ளை உறவுடன் மத்திய அரசு செயல்பட்டு தமிழக வளர்ச்சிக்காக முன் உரிமை அளித்து வருகிறது என அவர் கூறினார்.

kamalhaasan tamilisai
இதையும் படியுங்கள்
Subscribe