tamilisai

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய மின்னஞ்சலில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய மின்னஞ்சலில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது. முடங்கியுள்ள திரைப்படத்துறையை மீட்காதவர்கள் தமிழகத்தை எப்படி மீட்பார்கள்?

Advertisment

22 மாநிலங்களில் ஆட்சி புரியும் பாஜகதான் தமிழகத்தில் மாற்று சக்தியாக திகழும். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. தேனி தீ விபத்தில் மத்திய அரசின் துரிதத்தை சில கட்சிகள் விமர்சிப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.