Advertisment

எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்துவைத்தாவது சேற்றில் செந்தாமரை மலரும்-தமிழிசை!!

எங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை சேர்த்து வைத்துகூட, அதில் தாமரையை மலர செய்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,

TAMILISAI

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மத்திய பாஜக அரசு மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கொடுக்கவில்லை ஆய்விற்குத்தான் அனுமதி கொடுத்துள்ளது, ஆனால் ஆய்விற்கான அனுமதியையே நீங்கள் அணைக்கட்டியதை போல முன்னிறுத்துகிறீர்கள் என்றால் மீத்தேன் பற்றிய ஆய்வுக்குதான் கையெழுத்திட்டோம் என்று சொல்லும் ஸ்டாலின் மீத்தேன் எடுக்கத்தான் கையெழுத்திட்டோம் என சொல்லமுடியுமா என்ற கேள்வியைத்தான் உங்களிடம்முன்வைக்கிறோம்.

பாஜக மேகதாது அணை விஷயத்தில் அமைதியாக உள்ளதாக நீங்கள் பொய் பிம்பத்தை உருவாக்குகிறீர்கள். இப்போதுவரை மேகதாது பிரச்சனை இருக்கிறது என்றால் அதற்கு திமுகதான் காரணம். எனவேபாஜகவை நீங்கள்குறைசொல்லக்கூடாது.

புல், பூண்டிற்கே இங்கு வழியில்லை என கூறுபவர்களுக்கு பதில் சொல்லிவிட்டோம். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்துவைத்தாவது சேற்றில் செந்தாமரை மலரும். முதலில் வைகோ துரைமுருகனிடம் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார், பின்னர் அன்பழகன் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதுதிருமாவளவனுடன் சண்டை போட ஆரம்பித்துள்ளார். நான் அவ்வளவு லட்சம் கொடுத்தேன் இவ்வளவு லட்சம் கொடுத்தேன் என்று கூறுகிறார்.

ஸ்டாலினுக்கு பெரிய தலைவலியை தரப்போகிறது இவர்களது சண்டையும் கூட்டணியும், ஏதோ வலிமையான கூட்டணி அமைத்ததாக நினைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார்.

Tamilisai Soundararajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe