Advertisment

தமிழகத்திற்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன்- தமிழிசை 

கடந்த ஞாயிற்று கிழமை தமிழக பாஜக தலைவராக பதவிவகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டத்தற்கான நியமன ஆணையை இன்று பெற்றுக்கொண்டார்.

Advertisment

tamilisai interview in chennai

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டாவிற்கு எனது நன்றி. தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்கிறேன். அனைத்திலும் தேர்ச்சி பெறுவதுதான் எனது பழக்கம் ஆளுநர் பதவியிலும் பாஸ் ஆவேன். தமிழகத்திற்கும், தெலுங்கானாவிற்கும் ஒரு தமிழ் மகளாக, பாலமான செயல்படுவேன் என்றார்.

governor telungana tamilisai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe