சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழகதலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில்,

Advertisment

ப.சிதம்பரம் செய்வது சரியல்ல, அவர்மீது வழக்கு இருக்கிறது, விசாரணை இருக்கிறது அதை எல்லாம் விட்டு விட்டு இதுபழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது அதைவிட மோசமான அரசியல். இதை ராகுல் காந்தி ட்வீட் செய்கிறார், பிரியங்கா காந்தி ட்விட்செய்கிறார், அழகிரி சொல்கிறார் இதுமத்திய அரசு வைத்தகுறி என்றெல்லாம் சொல்கிறார்கள்.

Advertisment

tamilisai interview

இதில் அப்பட்டமாக அவர்கள் அரசியல் செய்கிறார்களே தவிர இது ஒரு ஊழல் குற்றச்சாட்டு வழக்கு என்பதைத்தான் டெல்லி உயர்நீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்திருக்கிறது. இரண்டு மூன்று முறை சிபிஐ அதிகாரிகள் அவர்கள் வீட்டிற்கு போனார்கள் ஆனால்ஏன் அவர் வீட்டுக்கு வரவில்லை, 6 மணி வரை டெல்லியில்தானே இருந்திருக்கிறார். இதைஅவர் சட்டரீதியாக அணுகட்டும் ஆனால் கொடுக்கப்பட்டது கைது நடவடிக்கை அல்ல, சம்மன்தான்விசாரணைக்கு ஏன் வரக்கூடாது. உயர்நீதிமன்றம் உங்களுக்கு ஜாமீன் மறுத்த சூழ்நிலையில் விசாரணைக்குதான் அழைக்கிறார்கள். விசாரணைக்கு அவர் வரவில்லை தலைமறைவாகி விடுகிறார் என்று சொன்ன பிறகுதான் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

இங்கு உள்ள எல்லோருமே என்ன சொல்கிறார்கள் என்றால் இதுஅரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்கிறார்கள். 6 மணி வரைக்கும் அங்கேதான் இருந்திருக்கிறார். இந்நிலையில்மத்திய அரசு புலனாய்வுத் துறையை வைத்து எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாதா? அப்படி கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு எப்படி அணுக முடியுமோ அப்படித்தான் அணுகிகொண்டிருக்கிறார்கள். ஏன் தலைமறைவாகி இருக்க வேண்டும். ஏன் செல்போனை சுவிட்ச் ஆஃப் பண்ண வேண்டும். ஏன் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருக்க வேண்டும். ஏன் வீட்டிற்கு வராமல் தலைமறைவாக வேண்டும். அதற்கு முன்னால் தலைவர்கள்அப்படிதான் செய்தார்களா? நேரடியாக விசாரணைக்கு நீங்கள் துணிச்சலாக ஒப்புக் கொள்ளுங்கள். அதன் பிறகு கைதுஆனாலும்கூட குற்றமற்றவர் என்றால் வெளியே வரப் போகிறீர்கள். அதில் ஏன் இவ்வளவு பிரச்சனை. நீங்கள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிலைப்பாடு நிச்சயமாக மடியில் கனம் இருக்கிறது அதனால் வழியில் பயமும் இருக்கிறது என்பதுபோல் இருக்கிறது. கைதுஇல்லையா என்பது இரண்டாவது, விசாரணை நடக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது ஆனால் சிதம்பரம் நடந்து கொள்ளும் முறை ஒரு சட்ட வல்லுனர் நடந்து கொள்ளுகின்ற முறை அல்ல என்றார்.

Advertisment