நேற்று (12.07.2019) தமிழாற்றுப்படை புத்தக வெளியீட்டு விழா காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதியரசி. விமலா ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் பேசிய வைரமுத்து, வைகோ இங்கே பேசினாரே, வைகோ பேசப்பேச எனக்கு ஒன்று தோன்றியது, தமிழாற்றுப்படையை எழுதியது நானா? இல்லை அவரா? தமிழாற்றுப்படையை தொலைத்துவிட்டால்கூட, நான் வைகோவை மட்டும் காப்பாற்றிவிட்டால் இன்னொரு பிரதியை எடுத்துக்கொள்ளலாம். அவரது நினைவாற்றல் மேலும், மேலும் ஆச்சர்யபடுத்துகிறது.