Skip to main content

"அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினி கட்சி தொடங்குவார்" - தமிழருவி மணியன்

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். 

 

Tamilaruvi Manian



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் 1967ல் நேரடி அரசியலுக்கு வந்தவன். 52 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நான் நின்றதில்லை. 2001ல் மூப்பனார் அவர்கள் மிகவும் வற்புறுத்தி ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக சட்டமன்றத்தேர்தலில் நிற்கவேண்டும் என்று சொன்னபோது கூட நான் நிற்கவில்லை. எனவே தேர்தல் குறித்த சிந்தனை எல்லாம் எனக்கு இல்லை என்று தெரிவத்தார்.

பின்னர் அடுத்த ஆண்டு நிச்சயம் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார்.  ரஜினி ஆழமாக சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர்  என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று இந்த நிமிடம் வரை தான் நம்பவில்லை.  உச்சநீதி மன்றத்தில் திமுக ஒரு வழக்கை கொண்டு போய் வைத்திருக்கிறது. அந்த வழக்கும் சதாரணமாக தள்ளிவடக் கூடிய ஒன்று அல்ல. புதிதாத ஐந்து மாவட்டங்களை உருவாக்கிவிட்ட பிறகு, அங்கு வார்டு வரையறை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா. அந்த வரையறையெல்லாம் முழுமையாக செய்து முடிக்காமல் தேர்தல் நடத்துவது என்பது எந்த வகையில் நியாயம்  என்றார்.  
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.