தமிழர் முகவரி கீழடி!

-அங்கு

தன்னிக ரில்லாத்

தமிழ்மகள் வைத்தாள்

Advertisment

தன்னிரு சுடர்விடும் காலடி!

.

k

Advertisment

தமிழர்க் கிணையாய் யாரடி?

- அன்று

தழைத்துக் கிளைத்த

தமிழ்ப்பண் பாடே

தகைமிகும் உலகின் தாய்மடி!

வையைக் கரையில் விடிந்தது

-நம்

வாழ்த்துக் குரிய

முன்னோர் வாழ்ந்த

வாழ்க்கை அங்கே படிந்தது!

.

கையறு ஆரியம் முடிந்தது

-அவர்

கையால் அளந்த

கற்பனை நீளம்

கலைந்ததில் அவர்திமிர் மடிந்தது!