Advertisment
கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, தேனி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.