சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் இன்று (11-04-2023) காலை 10 மணியளவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள காவிரி படுகையில் நாகப்பட்டினம் பனங்குடியில் அமைய உள்ள சிபிசிஎல் பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.