Advertisment

"கன்னிப் பேச்சு...எதிர்த்த பாஜக" நிர்மலாவை வெளுத்த தமிழச்சி தங்கபாண்டியன்!

தென் சென்னை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றவர் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் நேற்று தனது கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். கிட்டதட்ட 14 நிமிடங்கள் பேசிய அவர், பாஜக உறுப்பினர்களை, குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெறிக்கவிட்டார். வாழ்த்து சொல்லி அவரை பாராட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட் குறித்து கடுமையாக பேசினார். நீங்கள் தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல, அது ஒரு வெற்று அறிக்கை என்று கூறி மக்களவையில் அதிரடி காட்டினார்.

Advertisment

குறிப்பாக தன்னுடைய உரையை ஆரம்பிக்கும் போது திருக்குறளை கூறி தொடங்கினார். பேச்சின் இடையே கணியன் பூங்குன்றனாரின் வரிகளை உதாரணமாக கூறினார். அவரது பேச்சுக்கு சில இடங்களில் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அது எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய முழு உரையும் நிறைவு செய்த பிறகே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.

Advertisment

south chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe