Advertisment

“ஜனநாயகத்தில் மக்களே அதிகாரமிக்கவர்கள்” - மோடியை தாக்கும் தமிழச்சி

Tamilachi Thangapandian criticized Modi and BJP

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

Advertisment

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன்சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கிறது பாஜக. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணி 40 தொகுதிகளை வென்றும் பயனில்லை எனப் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் பதிலளித்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், “தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக, இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார், ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை. அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும். தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும். இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம் மிக்கவர்கள்.தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம். தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது . மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது. அதனால்தான்,இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’" என்று பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe