Advertisment

அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்... தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தட்டடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லையா, தவமணி தம்பதியினர். விவசாயிகளான இவர்களது மகன் கந்தசாமி, ஆராய்சி படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ சென்று தற்போது அமேசான் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியில் உள்ளார். அப்போது ஜான், அன்ஸ்டேசியா தம்பதியின் மகள் எலிசபெத் என்ற காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவருடன் பழக்கம் ஏற்பட்டு,

Advertisment

marriage

நாளடைவில் இந்த நட்புகாதலாக மாறியுள்ளது. மூன்றாண்டுகளாக காதலித்து வந்தவர்கள் கடந்த 5 நாள்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். இன்று கந்தசாமியின் பெற்றோர்களின் சம்மதத்துடன், தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு கந்தசாமியின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

America marriage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe