பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இவர்களா? தொகுத்து வழங்குவது யார்? வெளிவந்த தகவல்!

தனியார் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில்மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களைக்கடந்துள்ளது. பிக் பாஸ் மூன்று சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்று முகேன் ராவ் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை வென்றார். இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இந்த முறை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்கின்றனர். இதனால் அடுத்து வருகிற பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க நடிகர்கள் சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

big boss

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ல்போட்டியாளர்களாக 15 பேர் பங்கு பெற வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில், நடிகை கிரண், ஷாலு ஷம்மு, பூனம் பஜ்வா, பிகில் அமிர்தா ஐயர், நடிகை சுனைனா, நடிகை அதுல்யா ரவி, நடிகர் இர்பான், குக் வித் கோமாளி புகழ் சரண், டிக் டாக் புகழ் அக்ஷய் கமல், ரம்யா பாண்டியன், சஞ்சனா சிங், நடிகர் விமல் மற்றும் சில நடிகர்கள் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரபூர்வமாகத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கூறவில்லை என்பது குறிப்படத்தக்கது.

actor Actress bigboss kamalhaasan tv show
இதையும் படியுங்கள்
Subscribe