Skip to main content

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இவர்களா? தொகுத்து வழங்குவது யார்? வெளிவந்த தகவல்!

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


தனியார் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களைக் கடந்துள்ளது. பிக் பாஸ் மூன்று சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்று முகேன் ராவ் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை வென்றார். இந்த  நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இந்த முறை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்கின்றனர். இதனால் அடுத்து வருகிற பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க நடிகர்கள் சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
 

 

big boss


இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களாக 15 பேர் பங்கு பெற வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில், நடிகை கிரண், ஷாலு ஷம்மு, பூனம் பஜ்வா, பிகில் அமிர்தா ஐயர், நடிகை சுனைனா, நடிகை அதுல்யா ரவி, நடிகர் இர்பான், குக் வித் கோமாளி புகழ் சரண், டிக் டாக் புகழ் அக்ஷய் கமல், ரம்யா பாண்டியன், சஞ்சனா சிங், நடிகர் விமல் மற்றும் சில நடிகர்கள் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு தகவலும் இன்னும் அதிகாரபூர்வமாகத் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கூறவில்லை என்பது குறிப்படத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.