TAMIL TV COMEDY ACTOR BALAJI INCIDENT CHENNAI

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு போன்று நடித்ததால் 'வடிவேல் பாலாஜி' என புகழ் பெற்றவர்.

Advertisment

இந்நிலையில்வடிவேல் பாலாஜி (வயது 42) உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

மதுரையைச் சேர்ந்த வடிவேல் பாலாஜி, கோலமாவு கோகிலா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.