தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சர்வேதேச அழகி போட்டியில் பங்கேற்பு!

இந்தியா சார்பில் சர்வதேச அளவில் ஸ்பெயினில் நடைபெறும் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து பங்கேற்கிறார். இவர் இன்று செய்தியாளர்களுடன் கலந்துரையாடினர்.

tamil transgender Participated in the Tamil beauty competition

அவர் கூறியதாவது " இந்திய அளவில் நடைபெற்ற 'ட்ரான்ஸ் குயின் இந்தியா' திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் சென்ற வருடம் வென்றேன். அதேபோல் இந்த வருடமும் இப்போட்டி நடைபெற்றது. இந்த வருடமும் நான் வெற்றி பெற்றுருக்கிறேன். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. நான் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இந்த முறை என்னை சர்வதேச அளவில் என்னை அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள திருநங்கைகளுக்கான அழகி போட்டிக்கு செல்ல இருக்கிறேன். இந்தியா சார்பாக போட்டியிடுவது எனக்கு மேலும் சந்தோசத்தை கொடுக்கிறது".

இவர் மேலும் கூறுகையில் "இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகள் முன்னேறி வருகிறார்கள். அடுத்த மாதம் நான் நடித்த நாடோடிகள் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளது. திருநங்கைகள் வாழ்வை மாற்ற தான் இதுபோன்ற செயல்கள் நான் செய்கிறேன். பல திருநங்கைகள் இதுபோன்ற கனவுகள் கொண்டிருப்பார்கள். அவர்களும் இந்த துறைக்கு வரவேண்டும் என்றுதான் என்னுடைய ஆசை. மேலும் கூடிய விரைவில் திருநங்கைகளுக்கான மாடலிங், நடிப்பு கற்று கொடுக்கும் இன்ஸ்டிடியூஷன் ஆரமிக்க இருக்கிறேன். இது திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்கும்".

"நான் வெளிநாட்டிற்கு செல்ல ஸ்பான்சர் தேவைப்படுகிறது, எனக்காக உதவி செய்ய விரும்புவர்கள் என்னுடைய முகநூலில் தொடர்பு கொள்ளலாம்". என்று கூறினார்.

alt="nn" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4c205d39-d1ff-4abf-b6e6-f85392b172d7" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_60.jpg" />

beauty Tamilnadu Transgender winning
இதையும் படியுங்கள்
Subscribe