/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_209.jpg)
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.
அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை செசிலா சொர்ண குமாரி என்பவர் மாணவன் ஒருவன் மேடையில் "மார்கழித் திங்கள் அல்லவா" என்ற பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் பொது உணர்ச்சி வசப்பட்டு மாணவனுடன் சேர்ந்து நடனமாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.
மேலும் கலை நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிக் கலக்கிய தமிழ் ஆசிரியை செசிலா சொர்ண குமாரிக்கு சக ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)