Advertisment

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது! 

Tamil Rockers website admin arrested

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் திரைப்படத்துறையை அதிகம் பயமுறுத்துவது பைரசி எனும் திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் செயல் தான். படம் ரிலீஸ் ஆனவுடன் திரையரங்குகளில் வெளியாகும் படத்தை வீடியோ எடுத்து அதனை ரிலீஸ் ஆன அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் திரைத்துறை பெரும் நஷ்டங்களைச் சந்திப்பதாக திரைத்துறையினர் ராகுகாலமாகப் புலம்பி வருகின்றனர். இது போன்ற செயல்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளமும் ஈடுபட்டு வந்தது.

Advertisment

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாகப் படத்தை இணையத்தில் வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் இணையதள உரிமையாளரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் போலீசார் தரப்பில் எடுக்கப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களைப் பதிவேற்றம் செய்ததாக மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரைக் கேரள மாநிலம் கொச்சி சைபர் கிரைம் போலீஸார் இன்று (28.07.2024) கைது செய்துள்ளனர்.

Advertisment

இவர், நடிகர் பிரித்விராஜ் நடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாள படத்தை இணையத்தில் முறைகேடாக வெளியிட்டதாகப் படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளியாகும் புதிய படங்கள் அனைத்தையும் படம் வெளியாகும் முதல் நாளிலேயே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. மேலும் ஒவ்வொரு படத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் கமிஷனாக ஸ்டீபன் ராஜ் பெற்றதும் தெரியவந்துள்ளது.

admin cochin Kerala madurai tamilrockers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe