Advertisment

லஞ்சம் வாங்கிய தமிழக அதிகாரிகள் மீது வழக்கு தொடரவேண்டும் ! " - சி.பி.ஐ. இணை இயக்குநரிடம் திமுக புகார்

அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம், சென்னையில் தனது தொழிலை தொடங்குவதற்கு அரசின் அனுமதியை பெறுவதற்காக 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ள விவகாரம் சமீபத்தில் அம்பலமானது. இந்த லஞ்ச விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது திமுக. லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சென்னையிலுள்ள சி.பி.ஐ.யின் இணை இயக்குநரை சந்தித்து புகார் மனு தந்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ . அன்பரசன்.

Advertisment

அவர் கொடுத்த மனுவில்,

bribe

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

" அமெரிக்காவின் நியூஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் நிறுவனம் அதன் இந்திய கிளை நிறு வனமான காக்னுசன்ட் இந்தியா என்ற பெயரில் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் மீது 2014 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையம், (செக்யூரிடிஸ் அன்ட் எக்சேஞ்ச் கமிஷன்) காக்னிசன்ட் டெக் னாலஜி சொலூசன்ஸ் குழந்தைகள் வளாகத்தில் 27 லட்ச சதுர அடியில் வளாகத்தைக் கட்டுவதற்கும் காஞ்சிபுரம், மாவட்டம் சிறுசேரியில் வளாகம் கட்டு வதற்கும் அனுமதி பெறுவதற்காக தமிழ் நாடு அரசின் உயர் அதிகாரிகளுக்கு 2 மில்லியன் (20 லட்சம்) டாலர் லஞ்சம் அளித்தது தொடர்பாக புலனாய்வை மேற்கொண்டது.

அமெரிக்க பங்குச் சந்தை ஆணையை குற்றச்சாட்டின்படி, காக்னிசன்ட் நிறு வனத்தலைவர் கார்டன் கோபர்ன்னும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஈ.ஸ்ச் வாட்சும் லஞ்சம் கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த லஞ்சத்தை தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மற்றும் சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணைய (சி.எம்.டி.) உயர் அதிகாரிகள் கோரியிருந்தனர்.

bribe

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள் ளும் நிறுவனத்திடம் அவர்கள் அதைக் கோரியிருந்தனர். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழக அதிகாரிகளும் லஞ்சம் கோரியிருந்தனர். மாநில சுற்றுச்சூழல் அதிகாரிகளும் லஞ்சம் கோரியிருந்தனர்.(இனி இவர்கள் பொது ஊழியர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்).

ஒப்பந்த நிறுவனம் காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் அதிகாரிக்கு இது பற்றி தெரிவித்தது. அவர் அந்தச் செய்தியான பொது ஊழியர்கள் லஞ்சம் கோரும் தகவலை தனது மேற்பார்வையாளர் மற்றும் நடவடிக் கைகள் அதிகாரி மூலம் மேலதிகாரி களுக்கு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து 21.4.2014 மற்றும் 22.4.2014 ஆகிய இரு நாட்களும் இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிகாரி வீடியோகான் பிரன்ஸ் மூலம், அமெரிக்காவில் உள்ள மூத்த செயல் மற்றும் மூத்த சட்ட அலுவலர்களுடன் விரிவான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டார்.

அப்போது லஞ்சம் கொடுக்கும் நடவடிக்கையை எப்படி மேற்கொள்வது என்று வழிகாட்டு முறைகளைக் கோரினார். மேலே குறிப்பிடப்பட்ட பொது ஊழியர்களுக்கும் பிற அரசு ஊழியர்களுக்கும் 2014 –ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் லஞ்சம் வழங்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 1.6 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள உயர் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப் பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையும், அமெரிக்க அரசு வழிக்கறிஞர் அலுவலகமும் தொடர்ந்த வழக்கில் பங்குச் சந்தை ஆணையத்தில் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டு காக்னிசன்ட் நிறுவன அதிகாரிகள் தங்கள் வாதத்தை பதிவு செய்தனர்.

காக்னிசன் நிறுவனத் தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க பங்குச் சந்தை ஆணையம் வெளியிட்ட செய்தி வெளியீட் டின் 16-வது பத்தியில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ்நாட்டின் சிறுசேரியில் லஞ்சம் அளித்தது’’ என்றத் தலைப்பில், கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறுசேரியில் காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் முதல் ஒப்பந்த அமைப்புக்கு (கான்ட்ராக்டிங் ஃபார்ம்-1) இந்திய அதி காரிகளுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் டாலர் லஞ்சம் வழங்குவதற்கு அதிகாரம் அளித்தது. இது திட்ட அனுமதி உள்பட கட்டுமானம் தொடர்பான ஏராளமான அனு மதிகளும் உள்ளூர் மின்சார வாரியத்திடம் மின்சார அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்காகவும் ஒப்பந்த நிறுவனத்தால் 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் காக்னிசன்ட் மென்பொருள் நிறுவனம் அந்த அனுமதிகளைப் பெற்றது. ஒப்பந்த நிறுவனம் ஏராளமான தகுதியற்ற அல்லது நியாயமற்ற வேலைகளை மாற்றுவதற்கு (மாறுதல் ஆணைகளுக்கான) வேண்டுகோள்களைச் சமர்ப்பித்தது. போலியான விளக்கங்கள் எல்லாம் திருத்தப்பட்ட பிறகு, தொடக்கத்தில் கோரிக்கைகளை நிராகரித்த, காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் மாறுதல் ஆணையை அங்கீகரித்தது.

லஞ்சம் வழங்கியதற்காக முதல் ஒப்பந்த அமைப்புக்கு காக்னிசன்ட் இந்தியா நிறுவனம் 2015 முதல் 2016 வரை பல்வேறு தவணைகளில் பணம் வழங்கி யுள்ளது’’. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தி 15-ல் பங்குச்சந்தை ஆணையம் லஞ்சங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் 7 லட்சத்து 70 ஆயிரம் டாலர் வரை சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பதிவு செய்துள்ளது. இதுபோன்று, 17-வது பத்தியில் பங்குச் சந்தை ஆணையம் மாநில அரசு அதிகாரி களுக்கு செயல்படுத்துவதற்கான உரிமம் வழங்குவதற்காக அரசு அதிகாரிகளுக்கு 27 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளது.

அந்த உத்தரவில் உள்ள மேற்கண்ட பத்திகளைப் படித்துப் பார்த்தால் மேற்கண்ட சென்னையில் உள்ள பொது ஊழி யர்களால் லஞ்சம் கோரப்பட்டு இருப்பதும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களால் லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதும், அவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை ஒப்புதல் போன்ற பல்வேறு ஒப்புதல்களைப் பெறவும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட அனுமதியும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்திடம் மின்சார அனுமதி பெறவும், மாசு மாநில சுற்றுச்சூழல் துறைமூலம் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

பங்குச் சந்தை ஆணைய உத்தரவின் 25 மற்றும் 26 வது பத்திகளில் அவர்கள் ஒப்புக் கொண்டது தெளிவாகத் தெரிகிறது. காக்னிஜென்ட் இந்தியா லிமிடெட் நிறுவனம் குறிப்பிட்ட இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும், மேற்கண்டவைகளுக்கு திட்ட அனுமதி பெறவும், மின் தொடர்பு பெறுவதற்கான பணிகள் மேற்கொள்வதற்கும் இவைகளுக்கான அனுமதியை அந்நிறுவனத்திற்கு வழங்கு வதற்காக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சத் தொகையை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

அந்த லஞ்சத்தை கட்டுமான நிறுவனம் - 1 வழங்கியுள்ளது. பின்னர் அப்பணத்தை காக்னிஜென்ட் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. காக்னிஜென்ட் நிறுவனம் சார்பாக தரப்பட்ட லஞ்சம் அமெரிக்க டாலரில் 36 லட்சமாகும். அதாவது, இந்தியத் தொகையில் ரூபாய் 26 கோடியாகும். இந்தத் தொகை வழங்கியதை அமெரிக்க அதிகாரிகளிடம் அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த லஞ்சப் பணத்தை தமிழக அதிகாரிகள் நேரடியாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், வீட்டுவசதி, மின்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்குத் தெரிந்தே அது தொடர்பான கோப்புகள் நகர்ந்துள்ளன என்பதால், அந்த லஞ்சப் பணம், துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கு போட்டுக் கொண்டுள்ளனர் என்பதுதான் வெளிப்படை.

மேற்காணும் முகவரியில், மேற்காணும் நிறுவனத்துக்குத் திட்ட அனுமதி, மின் தொடர்பு மற்றும் சுற்றுச்சூழல் பெறுவதற் கான நடைமுறைகள் மேற்கொண்டதற்காக நிச்சயம், அந்நிறுவனம், துறை அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு நிச்சயம் உள்ளது என்பது தெரிகிறது.

1988-ஆம் ஆண்டு லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.பி.சி. உள்ளிட்ட குற்றச்சட்டங்களின் கீழ் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அந்த நிறுவனம் மற்றும் மேற்குறிப்பிட்ட துறை அதிகாரிகள் தண்டிக்கப்படக் கூடிய குற்றங்களைச் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்நிறுவனம் இந்தத் தகவலை அமெரிக்க பங்குச் சந்தை ஆணையத் திடம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை ஆணையத்தின் முன் உள்ள வழக்கை சரி செய்து கொள்வதற்காகவும், 25 மில்லியன் டாலர் தொகை அபராதமாக கட்ட ஒப்புக் கொண்ட நிலையில் மேற்கண்டவாறு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, 15.2.2019 ஆம் தேதியிட்ட பங்குச் சந்தை ஆணைய உத்தரவுபடி, பிடியானை வழங்க முடியாத குற்றச்சாட்டுகளை அது செய்துள்ளது என்பது தெளிவாகிறது.

அமெரிக்க நிறுவனமான காக்னி ஜென்ட் டெக்னாலஜி சொல்யூடின் கார்ப்ப ரேஷன் என்று நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளத்தக்க லஞ்சப் பணத்தை துறை அதிகாரிகளுக்கு வழங்கியதில் சதித்திட் டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளி நாட்டுப் பணத்தை கொண்டு செயல்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து இந்த லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. காக்னி ஜென்ட் நிறுவனத்தின் இந்திய சப்ஸிடெரி நிறுவனத்தின் பெயரில் உள்ள வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருந்து தான் இந்த லஞ்சம் தரப்பட்டுள்ளது.

இதில் பல்வேறு தவறுகளும் நடந்துள் ளன என்பதோடு லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் பல குற்றங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவைகள் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணை நடத்த முடியாது.

அத்துடன், அரசு உயர் அதிகாரிகளும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். எனவே, மேற்காணும் குற்றங்கள் மீது உரிய நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளவும், நீதித்துறையில் பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலை நாட்டவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்வது மிக அவசிய மாகும்.

அத்துடன் இதை முழுமையாகவும் விசாரிக்கப்பட வேண்டியதாகும். குற்றச்சாட்டை தாமதமாகப் பதிவு செய்து, விசாரணையையும் தாமதப்படுத்தினால், குற்றவாளிகள் சாட்சிகளை அழித்து விசாரணையை விரக்தியடையச் செய்து விட அந்த காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

எனவே, குற்றச்சாட்டைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வெகு விரைவில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இறுதி அறிக்கையை தாக்கல் செய்து சட்ட விதியை நிலைநாட்டும்படி கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்தின் 15.2.19 தேதிய உத்தரவினை இத்துடன் இணைத்துள்ளேன் " என குறிப்பிட்டிருக்கிறார் தா.மோ. அன்பரசன்.

Bribe Cognizant former minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe