தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தை பிறந்தாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் தொடங்கிவிடும். ஜல்லிக்கட்டில், அதிகமான வாடிவாசல்கள், அதிகமான காளைகள், அதிகமான காளையர்கள் அடுத்தடுத்த பெருமைகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டும் நடக்கிறது. ஆம், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தச்சன்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
2024 ம் ஆண்டு பிறந்ததுமே ஜனவரி 2 ஆம் தேதி தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடுகள் செய்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று(26.12.2023) செவ்வாய் கிழமை வாடிவாசல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.