Skip to main content

இன்று தாக்கலாகிறது தமிழகத்தின் முதல் இ-பட்ஜெட்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

 Tamil Nadu's first e-budget filed today!

 

தமிழகத்தில் இன்று காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

 

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தாக்கலாகும் இ-பட்ஜெட்டை கணினி திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட், வேளாண்  பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளில் பதிலுரை அளிக்கப்படுகிறது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்குகிறது. காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல்வர் பதிலளிக்க இருக்கிறார் .

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் அதுவும்  முதல் இ-பட்ஜெட் என்பது இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இன்றைய பட்ஜெட்டில் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்