Tamil Nadu's first agriculture budget filed today!

Advertisment

தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக நேற்று (13.08.2021) இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பொது நிதிநிலை அறிக்கையைத் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்திருந்த நிலையில்,வேளாண்துறை பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னதாக மாவட்ட அளவில் விவசாயிகளைச் சந்தித்தஎம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இந்நிலையில், விவசாயிகளுக்கான பல்வேறு அறிவிப்புகளைக் கொண்ட வேளாண் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.