இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும்கரோனாபரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 20 ஆம் தேதிமுதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக தலைமைச் செயலாளருக்கு அறிக்கை வாயிலாக வைத்துள்ள கோரிக்கையில், ''மே இரண்டாம் தேதிக்கு பிறகு மற்றொரு ஊரடங்கை தாங்கும் வகையில்தமிழக மக்களும் அவர்களது வாழ்வாதாரமும் இல்லை. இந்த ஒரு வாரத்தில் கரோனாதொற்றுப்பரவலை குறைக்கஅதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். கரோனாஇரண்டாம் அலை மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்ற செய்தி கவலையளிக்கிறது. வடமாநிலங்களில் மக்கள் ஆக்சிஜனுக்கும், படுக்கைக்கும் தடுமாறுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் உள்ள வலுவான சுகாதார உட்கட்டமைப்புநமக்கு வரப்பிரசாதம் என்றாலும் சரியான திட்டமிடல் வேண்டும். முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்பை வைத்து தொலைநோக்கு திட்டத்தை தயாரிக்க அரசு தவறிவிட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.