தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு இன்று கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால்மேலும் 4 பேர் உயிரிழந்ததால் கரோனாவால்பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 526 பேரில் சென்னையில் மட்டும்279 பேருக்குகரோனாஇருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்சென்னையில் மட்டும் மொத்தம் 3,330 பேருக்கு இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 360 ஆண்களும், 166 பெண்களுக்கும் கரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனோர்எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரத்தில் ஒரே நாளில் 67 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும், பெரம்பலூரில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 26 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 17 பேருக்கும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தை மூலம் 1,867 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.